ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்



ஜப்பானின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலநடுக்கமானது இவாதே மற்றும் ஆமோரி மாகாணங்களில் இன்று (02-04-2024) நள்ளிரவு 12.59 மணியளவில் ஏற்ப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை 
மேலும் இந்நிலநடுக்கம் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலநடுக்கம் இவாதே மற்றும் ஆமோரி மாகாணங்களின் வட கடலோர பகுதியில் மையம் கொண்டிருந்தது.

எனினும் நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

அத்துடன் நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.
புதியது பழையவை