இலங்கையில் குறைவடைந்த பிறப்பு வீதம் - உயர்வடைந்த இறப்பு வீதம்!2020ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதோடு இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 3 இலட்சத்து 25 ஆயிரம் ஆக இருந்த வருடாந்த பிறப்பு எண்ணிக்கை தற்போது 2 இலட்சத்து 80 ஆயிரம் ஆக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன் வருடாந்த இறப்பு எண்ணிக்கை 1 இலட்சத்து 40 ஆயிரத்திலிருந்து 1 இலட்சத்து 80 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலைமை சனத்தொகை பெருக்கத்தை பாதிக்கும் என பதிவாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
புதியது பழையவை