நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு




நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளும் பூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மூன்று நாட்களுக்கு பூட்டு
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மே 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், விலங்குகள் வெட்டப்படும் இடங்கள், இறைச்சி மற்றும் இறைச்சியை கசாப்பு செய்யும் இடங்களும் மூடப்படவுள்ளன.

தேசிய வெசாக் வாரம் மே 21 முதல் 27 வரை மாத்தளை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை