எரிக் சொல்ஹெய்ம் இரு நாள் பயணமாக இன்று யாழ்ப்பாணம் வருகின்றார்.
2002இல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான பேச்சுகளுக்கு நோர்வேயின் சமாதான தூதுவராக சொல்ஹெய்ம் பணியாற்றியிருந்தார்.
இவர், தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை தொடர்பான ஆலோசகராக உள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் சொல்ஹெய்ம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடுவார்.
தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அவர் வடக்கின் பல இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
மேலும், வடக்கில் முன்னெடுக்கப்படும் பசுமை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அவர் ஆராய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.