இன்றைய வானிலை முன்னறிவிப்பு!



வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்லும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். 

சூரியனின் வடக்கு நோக்கியநகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் குமுளமுனை, முறிகண்டி, கேந்திரமடு மற்றும் தன்னியாட்டு போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும். 

மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்  நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களிலும்  பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மற்றும்  மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.  

கடல் பிராந்தியங்களில் 


காங்கேசன்துறை  தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு,ஹம்பாந்தோட்டை  ஊடாக காலி  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில்  மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல்  பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 ‐ 25 km வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து அல்லது  மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
 சிரேஸ்ட  வானிலை அதிகாரி.
புதியது பழையவை