அமெரிக்க நகரங்களில் பதிவான நிலநடுக்கம்




அமெரிக்காவின் நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் ஆகிய இரு நகரங்களில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கமானது நியூ ஜெர்சி பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலும் நியூயார்க் நகரத்தில் 4.8 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அத்தோடு, பிலடெல்பியாவில் இருந்து நியூயார்க் வரையிலும், கிழக்கு நோக்கி லாங் ஐலேண்ட் வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் சபை கூட்டம்
நிலநடுக்கம் எதிரொலியால், நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வந்த காசாவின் நிலைமை குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
புதியது பழையவை