உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் தீர்மானம்!
உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்படி, உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள 8,400 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறுிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை