ஞானசார தேரரின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!




நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த தீர்ப்பானது இன்று (02-04-2024) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகேயால் வழங்கப்பட்டுள்ளது.

நான்கு வருட சிறைத்தண்டனை
பிரதிவாதி ஞானசார தேரர் தற்போது விதிக்கப்பட்டுள்ள நான்கு வருட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருப்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்திருந்தனர். 


இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை