தமிழரசுக் கட்சியின் பொதுக் கூட்ட விவகாரம்- நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) தொடர்பான வழக்கு மே மாதம் 31ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.


தமிழரசுக் கட்சியின் வழக்கு தொடர்பான விசாரணை இன்று (24-04-2024) திருகோணமலை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“இந்த வழக்கில் காலம் கடந்து வெற்றி பெற்றாலும் அது வழக்கில் தோல்வி அடைந்ததாகவே கருதப்படும்.

அது கட்சியின் நிலைப்பாட்டை மோசமான கட்டத்துக்கு தள்ளிவிடும். அத்துடன், வழக்காளி எதை எதிர்பார்க்கின்றார் என நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை