இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்இந்த வருடம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 39,798 வெளிநாட்டவர்கள் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் முதல் வாரத்தில் 7,831 இந்தியப் பயணிகளும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,892 பேரும் ரஷ்யாவிலிருந்து 4,087 பேரும் ஜேர்மனியிலிருந்து 2,712 பேரும் அதிக எண்ணிக்கையில் இலங்கைக்கு வந்துள்ளதாக அந்த சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பொன்னாவெளி விவகாரம்: சிறீதரனின் மௌனத்திற்கான காரணத்தைப் போட்டுடைத்த கமக்கார அமைப்பினர்
பொன்னாவெளி விவகாரம்: சிறீதரனின் மௌனத்திற்கான காரணத்தைப் போட்டுடைத்த கமக்கார அமைப்பினர்
இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள்
ஒரு வார காலத்தில் கடந்த 06 ஆம் திகதியே அதிகமான சுற்றுலாப் பயணிகள் (7157 பேர்) நாட்டிற்கு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 675,582 வெளிநாட்டவர்கள் சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வந்துள்ளனர்.

இதன்படி இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை