மதுபானசாலைகளை மூட உத்தரவு!நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இரண்டு தினங்களுக்கு மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் (Excise Department of Sri Lanka) தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை (Tamil sinhala new year) முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (12-04-2024) மற்றும் நாளை(13-04-2024) மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அண்மையில் கொழும்பில் சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களை இலக்காகக் கொண்டு இரண்டு பண்டிகைக் கால நாட்களில் கொழும்பில் விசேட நடவடிக்கையொன்றை கலால் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி மதுபானசாலைகள் நேற்று(11) இரவு 10 மணி வரை திறந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை