மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்து வருதல்


மட்டக்களப்பு மாவட்டம் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை இன்று(14-04-2024)காலை செட்டிபாளையம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டது.

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இன்று (14-04-2024) கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்துச் செல்லும் நிகழ்வு இடம்பெற்றது.

கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க செட்டிபாளையம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டது.

ஆலயத்தின் தேரோட்டமானது (22-04-2024) ஆம் திகதியும் (23-04-2024)ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.புதியது பழையவை