காணாமற் போன சிறுவன் பௌத்த பிக்குவாக துறவறம்மதுரங்குளியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுவன் , பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தாய் வெளிநாடு சென்றிருந்த நிலையில் பாட்டியின் பொறுப்பில் வளர்ந்து வந்த குறித்த சிறுவன், குடும்பத்தினர் மீதான அதிருப்தியில் வீட்டை விட்டும் வெளியேறி சென்றுள்ளார்.

இந்நிலையில் தனியாக கொழும்பு வந்திருந்த சிறுவனை அங்கு பௌத்த பிக்கு ஒருவர் சந்தித்துள்ளார்.

குறித்த பிக்குவின் அழைப்பின் பேரில் கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றுக்குச் சென்ற சிறுவன் தற்போது பௌத்த பிக்குவாக துறவறத்தில் ஈடுபட்டுள்ளார்.
புதியது பழையவை