நாடாளுமன்றம் அமர்வுகள் நாளை ஆரம்பம்!நாடாளுமன்றம் நாளை முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.


இதற்கமைய நாளை முற்பகல் 9.30க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் பல்வேறு சட்டமூலங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

நாளை முற்பகல் 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 10.30 முதல் பிற்பகல் 5.00 மணி வரை பிரிவிடல் திருத்தச் சட்டமூலம் பராட்டே சட்டத்தை 2024 டிசம்பர் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கும் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
புதியது பழையவை