தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளராக முதல் முறையாக தமிழர் நியமனம்இலங்கை வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்து  தமிழர் ஒருவர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் வடக்கு மற்றும் வட மத்திய பிராந்திய சேவைகள் நிலையத்தின் மேலதிக பொது முகாமையாளராக கடமையாற்றிய பாலசிங்கம் பாரதிதாசன் என்பவரே பொது முகாமையாளராக இன்று (06-05-2024) கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.


நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை
இவர் 1991இல் இளங்கலை பொறியியல் (சிவில்) பட்டத்தினை மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும் ,1998இல் கட்டுமான முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டத்தினை மொறட்டுவ பல்கலைக்கழகத்திலும், 2008இல் நீரியல் மற்றும் நீர் வளங்கள் கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தினை நெதர்லாந்து பல்கலைக்கழகத்திலும், 2018இல் வணிக நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தினை இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.இந்நிலையில், இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் fellowship ஆகவும் உள்ளார்.

மேலும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் பொறியியளாளராக, பிராந்திய முகாமையாளராக , திட்ட முகாமையாளராக, உதவிப் பொது முகாமையாளராக, திட்டப் பணிப்பாளராக, பிரதிப் பொது முகாமையாளராக, மேலதிக பொது முகாமையாளராக என பல்வேறு பதவிகளை வகித்ததன் ஊடாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தனக்கென ஒரு தடம் பதித்துக் கொண்டுள்ளார்.
புதியது பழையவை