மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 4ஆம் வாட் ரான்ஸ் போட் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம் ஒன்றில் இருந்த பொருட்கள் அடங்கிய பெட்டி இளைஞன் மீது சரிந்து விழுந்ததில் இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையைச் சேர்நத 23 வயதுடைய எம்.ஜ.எம்.றிமாஸ் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது இன்று (29-05-2024) காலை கொழும்கில் இருந்து வெளிநாட்டு பெட்டிகளை ஏற்றி வந்த வாகனம் அப் பெட்டிகளில் சிலவற்றை பிரிதொரு வாகனத்திற்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்ட போது அதில் ஒரு பாரிய பெட்டியானது திடிரென சரிந்து விழுந்ததினால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சடலம் வழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உடற் கூற்றாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.