அமெரிக்காவை பின்தள்ளி முதலிடம் பிடித்தது இலங்கை




"1948-ல் இலங்கையில் ஒருவரின் ஆயுட்காலம் 42 ஆண்டுகள். 60 வயதுக்கு மேல் வாழ்வது மிகவும் அரிது. ஆனால் 75 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இலங்கையில் 79 ஆண்டுகள் வாழ்கிறார்கள். மிகவும் வளர்ந்த அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஒரு நபரின் ஆயுட்காலம் 78 ஆண்டுகள் ஆகும், உலகின் மிகவும் முன்னேறிய நாட்டை விட நாம் சற்று முன்னால் இருக்கிறோம் என சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

எல்பிட்டிய ஹிபன்கந்த கனிது வித்தியாலயத்தில் நடைபெற்ற "சுவ உதான" மருத்துவ சிகிச்சை நிலையத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில், “


அதிகரித்த இலங்கையரின் ஆயுட்காலம்

1948-ல் நம் நாட்டில் ஒருவரின் ஆயுட்காலம் 42 ஆண்டுகள். 60 வயதுக்கு மேல் வாழ்வது அரிது. இன்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் 79 ஆண்டுகள் வாழ்கிறார்கள் மிகவும் வளர்ந்த அமெரிக்காவில் ஒருவரின் ஆயுட்காலம் 78 ஆக உள்ளது. பொருளாதாரத்தில் நாம் பணக்காரர்களாக இல்லாவிட்டாலும், ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.


நம் நாட்டை விட நீண்ட ஆயுட்காலம் கொண்ட பல நாடுகள் உள்ளன. ஜப்பானில் 83 வருடங்கள் வாழ்கின்றனர்.



நாட்டில் சிறுநீரகக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்களின் பரவல் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது, இது போன்ற சுகாதார கிளினிக்குகளை நாடு முழுவதும் நடத்துவதன் மூலம், இந்த நாட்டிற்கு ஆரோக்கியமான தேசத்தை வழங்குவோம் என்றார்.
புதியது பழையவை