கண்ணீர் சிந்தும் மாதா சொரூபம் -படையெடுத்த மக்கள் கூட்டம்



யாழ்ப்பாணம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது, நேற்று (04-05-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, வழிபாட்டிற்கு சென்ற பக்தர்கள் சிலர் மாதாவின் சிலையை தொட்டு வழிபட்ட வேளையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை அவதானித்துள்ளனர்.


மேலும் குறித்த விடயத்தை அறிந்த மக்கள் ஆலயத்திற்கு படையெடுத்து வருவதுடன் மாதாவின் கண்களில் கண்ணீர் வருவதை பார்வையிட்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த 2008ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் குறித்த தேவாலயத்தில் மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை