மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்




மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திரசிகிச்சை பிரிவு தொகுதி விரைவில் சேவைக்காக திறக்கப்படும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் வைத்தியர் க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.

இன்று(02-95-2024) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திரசிகிச்சை பிரிவு தொகுதியினையும் அவர் பார்வையிட்டார். 

இலங்கை-இந்திய உறவு திட்டத்தின் கீழ் சுமார் 280 மில்லியன் ரூபா செலவில் இந்த சத்திரசிகிச்சை பிரிவு நிர்மாணிக்கப்படுகிறது.


சத்திரசிகிச்சை பிரிவு தொகுதியினை பார்வையிட்ட உயர்ஸ்தானிகர், வைத்தியசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

வைத்தியசாலைகளின் தேவைகள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்தார்.
கலந்துரையாடலில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் வைத்தியர் க.கலாரஞ்சனி,பிரதி பணிப்பாளர்,சிரேஸ்ட சித்தர சிகிச்சை நிபுணர் ஜீப்ரா, சிரேஸ்ட பொது வைத்திய நிபுணர் மதனழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை