மட்டக்களப்பில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!



மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் உள்ள பாழடைந்த வெற்றுக்காணியொன்றினுள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய பீ.மதனராஜ் என்பவரே சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துடன் , மட்டக்களப்பு தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை முன்னெடுத்தனர்.




இதனையடுத்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் சடலத்தை பார்வையிட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சடலம் பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
புதியது பழையவை