விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்



உர மானியம் பண்டி உரத்தை (MOP) இலக்காகக்கொண்டு நேற்று (07-05-2024) முதல் விவசாயத் திணைக்களத்தின் மூலம் உர மானியத்தொகையாக விவசாயிகளின் கணக்கில் 15,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

நெற்செய்கையை முடித்துள்ள விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயத் திணைக்களத்தின் கூற்றுப்படி, கடந்த சில பருவங்களில் நெற்பயிர்ச்செய்கைக்கு பண்டி உரத்தின் பயன்பாடு அளவு குறைந்துள்ளது.


உரத்தின் பயன்பாடு 
நெற்பயிர்களை வலுப்படுத்தவும், நெல் விதைகளை முழுமையாக்கவும் பண்டி உரம் இடுவது கட்டாயம் என வேளாண்மைத் துறை வலியுறுத்தினாலும், கடந்த பருவத்தில் அந்த உரத்தின் பயன்பாடு குறைந்துள்ளது.

அதன்படி கடந்த பருவத்தில் 08 இலட்சம் ஹெக்டேயர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் 11,000 மெற்றிக் தொன் உரங்களே விற்பனை செய்யப்பட்டதாக திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


அதிக பருவத்திற்கு பண்டி உரத்தின் தேவை 30,000 மெட்ரிக் டன் என்றாலும், அதில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே விவசாயிகள் கொள்முதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பண்டி உரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த ஆண்டு பருவத்தில் உர மானியத் தொகையை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


பண்டி உரத்தின் தேவை

இதேவேளை, தேவையான அளவு பண்டி உரம் நாட்டில் உள்ளதாக அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களின் தலைவர் தெரிவித்துள்ளார்.


இதன்படி, இந்த ஆண்டுக்கான பண்டி உரத்தின் தேவை சுமார் 15,000 மெற்றிக் தொன் என்றாலும், தற்போது 35,000 மெற்றிக் தொன் கையிருப்பு உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


அதில் 27,000 மெற்றிக் தொன் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களின் வசம் இருப்பதாக தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை