மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு!
புத்தளத்தில் hair dryer உபயோகிக்கையில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் என்பவரே இன்று (30-05-2024) உயிரிழந்துள்ளார்.

hair dryer மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மாணவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுளார். இதனையடுத்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவர் உயிர்ழந்துள்ளார்.

இந்நிலையில் மாணவனின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை