மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றிய லொறி - சேதமடைந்த பொருட்கள்



கொழும்பில் இருந்து மட்டக்களப்பு, காத்தான்குடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை நாவலடி பகுதியில் வைத்து தீப்பற்றியதில் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

குறித்த சம்பவமானது, நேற்று புதன்கிழமை (15-05-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த லொறி வழமைபோல கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு பொருட்களை ஏற்றிவரும் சேவையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதனையடுத்து, பொலிஸார் அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை