ஜப்பானில் இலங்கை மாணவர்கள் இருவர் கைது!சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பாக இரண்டு  இலங்கை மாணவர்கள் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த போது தனது குழந்தையை கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் இபராக்கி மாகாணத்தின் டொரைட்டின் ருபாசிங் லியனகே உதேசிகா அயோமி ஜெயலத்தும், அதற்கு உதவியதாக அவரது ஆண் நண்பரான முனசிங்க சுதேஸ் டில்சான் டி சொய்சாவும் கடந்த 23ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி டி சொய்சாவின் வீட்டில் வைத்து ஜயலத் தனது குழந்தையை கருக்கலைப்பதற்காக போதைப்பொருளை பயன்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஜப்பானிய பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், பொலிஸாரிடம் இருவரும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளனர்.


கடந்த காலங்களில் கர்ப்பமாகி குழந்தைகளை பிரவசித்த சில மாணவிகள் வீடு திரும்பியதாகவும் சிலர், தங்கள் குழந்தைகளை சொந்த நாடுகளில் குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுவிட்டு படிப்பை தொடர்ந்ததாகவும் கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதேவேளை,  இலங்கை மாணவர்களின் பிரச்சினையில், சர்வதேச மாணவர்களின் நிலையற்ற குடியுரிமை என்ற விடயமும் ஒரு காரணியாக இருக்கலாம் என நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதியது பழையவை