யாழ்ப்பாணத்தில் ரோல்ஸில் துருப்பிடித்த கம்பி காணப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (24-05-2024) இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மருதானர்மடத்தில் உள்ள காங்கேயன் வெதுப்பகத்தில் வாங்கிய ரோல்ஸிலேயே துருப்பிடித்த (4 inch) கம்பி காணப்பட்டுள்ளது.
ரோல்ஸில் கறல் கட்டிய கம்பி
இதேவேளை, கடந்த 21ஆம் திகதி யாழ். மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணில் கண்ணாடிப் பீங்கான் துண்டு காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டர் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எனவே தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் ஏற்படுகின்றமையால் கடைகளில் உணவுகளை கொள்வனவு செய்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.