நினைவுகூர அனைவருக்கும் உரிமை உண்டு! -அமரிக்க தூதுவர் தெரிவிப்பு!உயிர் நீத்த தங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற பூர்த்தியாகவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக காணாமல்போனோர் குடும்பங்கள் முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்தேன் என ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்றும் பல குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை