கிளிநொச்சிக்கு ஜனாதிபதி விஜயம்; விபத்தினால் பரபரப்பு!
வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சியில் கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் ப்ரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் தீவிரமாக செயற்பட்டுள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடம் திறப்பதற்காக இன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயம் செய்துள்ளார்.இந்த நிலையில், காலை 8.30 மணியளவில் குறித்த விபத்து வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. வேக கட்டுப்பாட்டை இழந்த ரிப்பர் வாகனம் வீதி ஓரத்தில் வைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதியது பழையவை