திருமண உடையில் வந்து ஆசிரிய நியமனத்தை ஏற்ற மணமகள்



ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான அரச நியமனம் வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற தனித்துவமான நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இதன்படி நேற்று(30-05-2024) திருமண பந்தத்திற்கு தயாரான யுவதி ஒருவருக்கும் ஆசிரியர் நியமனம் கிடைத்துள்ளது.

திருமண கோலத்தில் வந்து 
அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த திலினி  என்ற மணமகளுக்கே ஆசிரியர் நியமனம் கிடைத்தது.



இதன்படி அவர் திருமண கோலத்தில் வந்து தனது ஆசிரிய நியமனத்திற்கான கடிதத்தை பெற்றுச் சென்றார்.


தென் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை