விமான நிலையத்தில் ஜெல் தங்கத்துடன் ஒருவர் கைது!4 கோடி பெறுமதியான ஜெல் தங்கத்துடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 1,975 கிராம் எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த 25 வயதுடைய ஒரு சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சிவலி அருகொட தெரிவித்துள்ளார்.


சந்தேக நபர் தனது காலணி மற்றும் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை