தமிழினப்படுகொலை வாரம் - முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு!



2009ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் உணர்வுபூர்வமாக நினைவுகூறுப்பட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, தமிழினப்படுகொலை வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் (12-05-2024) முல்லைத்தீவு  முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தகாலத்தில் பொருளாதார தடைகளால் மக்களுக்கு உணவு கிடைக்காத பட்சத்தில், தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது.



அதேவேளை, இந்த கஞ்சியை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.


இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கும் எதிர்கால சந்ததிக்கு எடுத்து கூறும் முகமாக இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.




புதியது பழையவை