போலி மருத்துவ நிலையங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!



போலி சான்றிதழ்களை பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் வைத்தியர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், போலி வைத்திய நிலையங்களை நடத்தும் நபர்களை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய ஸ்டிக்கரை வாகனங்களில் தவறாக பயன்படுத்துவோர் மீது மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


மேலும், போலி சான்றிதழ்களை வழங்கி வைத்தியர்களாக நடித்து மருத்துவ நிலையங்களை நடத்துபவர்கள் மற்றும் வைத்தியர்கள் போல் வேடமணிந்து சில சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை