முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்ட ஊர்தி - இலங்கை பொலிஸார் கெடுபிடி
தமிழின அழிப்பு இறுதி நாளான மே 18 இன்று கிளிநொச்சி தர்மபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி நினைவு கொட்டகை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளி வாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நோக்கி சென்ற ஊர்தியை கடுமையாக பொலிசார் சோதனைக்குட்படுத்தியிருந்தனர்.


சிங்கள் அரசல் த்மிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டு இன்று 15 ஆண்டுகளை கடந்துள்ளது. எனினும் மக்களின் வேதனைகளும் வலியும் இன்னும் மறைந்தபாடில்லை.


தாயகத்தில் மட்டும்ல்லாது  புலம்பெயர் தேசங்களிலும் எம்மவர்கள்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை  கண்னீருடன் நினைவேந்துகின்றனர்.


புதியது பழையவை