மட்டக்களப்பில் பொலிஸாரின் தடையினையும் மீறி வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி



மட்டக்களப்பு வாகரை பகுதியில் பொலிஸாரின் தடையினையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால்  நினைவேந்தலின் ஆறாவது நாளான நேற்றே (17-05-2024) இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கதிரவெளி வைத்தியசாலை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக வாகரை பிரதேச பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


இறுதி யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த சொந்தங்களுக்கு பிதிர்கடன் நிறைவேற்றிய உறவுகள்
இறுதி யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த சொந்தங்களுக்கு பிதிர்கடன் நிறைவேற்றிய உறவுகள்
பொலிஸாரின் நடவடிக்கை
இதன்போது , அங்கு வருகை தந்த வாகரை பொலிஸார் அப்பகுதியில் கஞ்சி வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தி அங்கிருந்து செல்லுமாறு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.



அத்துடன், உயிர்நீர்த்தவர்கள் நினைவாக ஈகச்சுடர் ஏற்றுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் வீசியெறிந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாரின் தடையினையும் மீறி அப்பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் உட்பட பல செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை