நகைக் கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளைகொழும்பு - ஹோமாகம நகரில் உள்ள நகைகடை ஒன்றில் துப்பாக்கி முனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் நேற்று(10-05-2024) இடம்பெற்றுள்ளது.

ஹோமாகம நகரத்தில் உள்ள நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, நகைக் கடையிலிருந்த 36 மோதிரங்களும் 8 பெண்டன்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


இந்நிலையில் சந்தேகநபர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள்களில் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை