மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று (12-05-2024)ஆம் திகதி வைத்தியர்.S.தட்சணாமூர்த்தி ஞாபகார்த்தமாக இரத்ததான முகாம் இடம் பெற்றனர்.
களுவாஞ்சிகுடி போதனாவைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டடுள்ள குருதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான முகாமானது களுவாஞ்சிகுடி போதனாவைத்தியசாலையின் வைத்தியர் ESR.சில்வா தலைமையிலான குழுவினர் வருகை தந்து இரத்த கொடையாளிகளிடம் இரத்தம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய குருதிக்கொடை நிகழ்வில் இளைஞர் யுவதிகள் குருதி வழங்கினர்.
பங்குபற்றிய அனைவருக்கும் வைத்தியர்.S.தட்சணாமூர்த்தி ஞாபகார்த்தமாக மரக்கன்றுகள் வழங்கியமையினை கானக்கூடியதாக இருந்தனர்.