10வது சர்வதேச யோகா தினம்!இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் 10வது சர்வதேச யோகா தினம் திருகோணமலை மெக்கேயர் மைதானத்தில் (14-06-2024)இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண இந்திய உயர் ஸ்தானிகர் சாய் முரளி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் 2500 இற்கும் மேற்பட்ட யோகாசன மாணவர்கள்  கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை