மட்டக்களப்பு மகிழடித்தீவு இனப்படுகொலை-33, ஆண்டு நினைவு



மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப்பெருநிலம் வளம்நிறைந்த பழமையான ஊர் மகிழடித்தீவு அங்கு 1991. யூன்,12, ம் திகதி மணல்பிட்டி சந்தியில் அமைந்திருந்த இராணுவமுகாமில் இருந்து மண்முனை துறைக்கு உழவு இயந்திரத்தில் இராணுவத்தினர் சென்று திரும்பிய போது ஒரு கண்ணிவெடித்தாக்குதல் இடம்பெற்றது..!

அதன்பின்னர் மகிழடித்தீவு ஊரை சுற்றி வழைத்த இராணுவம் கண்மூடித்தனமாக பல அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தனர்.

அங்கு இருந்த நெல் ஆலை ஒன்றிலும், கண்ணிவெடி இடம்பெற்ற மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை இடைப்பட்ட வீதியில் இரு்த மடுவிலும் பலரை குவித்து எரித்ததும் கொன்றனர்.

இந்த படுகொலையை விசாரணை செய்யப்படவேண்டும், அதற்கான ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என அப்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப்பரராசசிங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தப்பட்டது.
பலர் அதற்கு சாட்சியம் அளித்தும் பின்னர எதுவும் நடக்கவில்லை.

1991, யூள்.12, மகிழடித்தீவு படுகொலை இடம்பெறுவதற்கு முன் 1987, ஜனவரி,28, ல் கொக்கட்டிச்சோலை படுகொலை என கூறப்படும் முதலைக்குடா இறார்வளப்பு திட்டம், மற்றும் படுவான்கரை பெருநிலம் எல்லா இடங்களிலும் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள. படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு படுகொலைகளில் உயிர் நீத்த தமிழ்மக்கள் நினைவாகவே மகிழடுத்தீவு சந்தியில் நினைவுத்தூபி 2002.ம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை