10 நாட்களில் 971 டெங்கு நோயாளர்கள்



நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 10 நாட்களில் 971 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். 9 ஆயிரத்து 441 நோயாளர்கள் இங்கு பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதிக்குள் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
புதியது பழையவை