உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம்2023 ஆண்டுக்கான கா.பொ. த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபர் ஏ. எம். முஹைத் தெரிவித்தார்.செந்தில் தொண்டமானைச் சந்தித்த மாணவர்கள்

அதன்படி பரீட்சை திணைக்களம் இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஸாஹிரா கல்லூரியின் 141 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர், அவர்களில் 43 பேர் மாணவர்கள், மீதமுள்ளவர்கள் மாணவிகள்.


அவர்களில் 114 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகவும், 44 பேரின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதிபர் கூறுகிறார். 

இந்நிலையில், ஆளுநர் செந்தில் தொண்டமானைச் சந்தித்த மாணவர்கள் தமக்கு நேர்ந்த அநீதி தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் கல்லூரியிலேயே அமைக்கப்பட்ட பரீட்சை நிலையத்திலேயே பரீட்சை எழுதியதாக தெரியவந்துள்ளது.
புதியது பழையவை