வீரர்முனை என்னும் காரணப் பெயர் மருவி இன்று வீரமுனை என வழங்கப்படுகின்றது




மட்டக்களப்பு  தமிழகத்தின்   பழம்பெரும் கிராமங்களில் ஒன்றான  இந்த வீரமுனைக் கிராமமானது 1200 ஆண்டுகால வரலாற்றுப் புகழ் மிக்கது. 

அதன் வரலாறுகளை கூறும் செப்பேடுகள் ஓலைச்சுவடிகள் போன்றவற்றினை ஆராய்ச்சி செய்து அருள் செல்வநாயகம் என்னும்  வரலாற்று அறிஞர் எழுதிய நூல் இது. 

இரண்டாவது  உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968ஆம் ஆண்டு சென்னையில் இடம் பெற்ற போது அறிஞர் அண்ணாத்துரை உள்ளிட்ட தமிழாய்ந்த அறிஞர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு பெரு வரவேற்பினை பெற்ற கட்டுரையின் நூல் வடிவமே இது. 

இந்நூல் வெளிவருவதற்கு முன்னரே அறிஞர் அருள் செல்வநாயகம்(1973) இறந்துவிட நேர்ந்தது. எனினும் சீர்பாத குல சமூக கலாசார ஒன்றியத்தின் முயற்சியில் 1982ஆம் ஆண்டு இந்நூல் வெளியானது. 

தற்காலத்தில் இதன் பிரதிகள் அழிந்து போனதன் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு இந்நூல் 'திருவருள்' பதிப்பக வெளியீடாக இரண்டாம் பதிப்புக் கண்டது. இவ்வெளியீட்டினை சாத்தியமாக்கிய அறிஞரின் வாரிசுகளான திருமதி ஜெயந்திமாலா குணசீலன், அருள் செல்வநாயகம் ரவீந்திரன் போன்றோர் வாழ்த்துகளுக்குரியவர்கள். 

இம்மாதம் ஜூன் 06ஆம் நாள் அறிஞரின் 98 வது பிறந்ததினம். அவரது புகழ் நீடுழி வாழ்க.
புதியது பழையவை