வீரமுனையை மையமாக கொண்டு தனியான பிரதேசசபை உருவாக்கப்படவேண்டும்அம்பாறை மாவட்டத்தில் வீரமுனையானது வரலாற்று ரீதியாக நீண்ட வரலாற்றினையும் தனித்துவத்தினையும் பல கிராமங்களுக்கு தாய்க்கிராமமாகவும் இருக்கின்றது.அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் பிரதேசசபையுடன் இணைந்திருப்பதன் காரணமாக வீரமுனை கிராமம் பல வழிகளில் புறக்கணிக்கப்பட்டுவருவதுடன் அதன் தனித்துவத்தினை இழக்கச்செய்யும் நடவடிக்கைகள் திட்டமிட்ட இனவாத அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றது.

வீரமுனையும் அதனைச்சூழவுள்ள தமிழ் கிராமங்களின் தனித்துவங்களை அழித்து ஒரு சமூகம் தனது தனித்துவத்தினை காட்டமுனைகின்றது.

இதன்காரணமாகவே 1990ஆம் ஆண்டுகளில் இந்த கிராமங்களை அழிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.எனினும் வீரமுனை மக்கள் என்றும் தமது மண்ணின்மீது கொண்ட பற்று காரணமாக மீள் எழுந்து தனித்துவமாக எழுந்து நிற்கின்றனர்.

எனவே வீரமுனையின் தனித்துவமான கிராமம் என்பதுடன் அதனுடன் இணைந்த தனித்துவ கிராமங்கள் சூழவுள்ளன.எனவே வீரமுனையினையும் அதனை அண்டிய பகுதிகளையும் உள்ளடக்கியதாக தனியான பிரதேச செயலகம்,தனியான பிரதேசசபையினை உருவாக்கவேண்டும்.

வீரமுனை,மல்வத்தை,மல்லிகைத்தீவு,வளத்தாப்பிட்டு,வீரச்சோலை,கோரகல்லிமடு உட்பட பல கிராமங்களை உள்ளடக்கிய வீரமுனை பிரதேசசபையினை உருவாக்கவேண்டும்.அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.நிலத்தொடர்பற்ற கல்வி வலயம் ஒன்று உருவாக்கமுடியுமானால் நிலத்தொடர்பற்ற பிரதேச சபையொன்றையும் உருவாக்கமுடியும்.முயற்சி செய்வோம் அனைவரும் கைகோருங்கள்.
புதியது பழையவை