கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரிப்பணத்தை செலுத்தாமல் செல்ல முற்பட்ட இரு வர்த்தகர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மடிக்கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மதுபானங்களுக்கான வரியை செலுத்தாமல் செல்ல முயற்சி செய்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தைானவர்களில் ஒருவர் ஜா-எல உடம்மித்த பகுதியைச் சேர்ந்த 42 வயதான வர்த்தகரும் மற்றையவர் நீர்கொழும்பைச் சேர்ந்த 41 வயதான வர்த்தகரும் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரும் டுபாயிலிருந்து 15 மில்லியன் பெறுமதியான பொருட்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விளக்கமறியல்
அவர்கள் 20 மடிக்கணினிகள், 15 புதிய மடிக்கணினிகள், 15 ஐபோன்கள் மற்றும் 21 மதுபான போத்தல்களை கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் பயன்படுத்திய 20 மடிக்கணினிகளுக்கு மட்டுமே வரி செலுத்தியதாக சிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜூன் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த மோசடியில் சுங்க அதிகாரிகள் யாரேனும் ஈடுபட்டார்களா என்பதை விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.