மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் ஆயிரங்கால் மண்டப வீதியில் உள்ள வாய்க்காலில் இன்று(16-06-2024) பி.ப 2.00 மணியளவில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக கிராமவாசிகளினால் அடையாளம் கானப்பட்டனர்.
அவதானித்த கிராமவாசிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்து இடத்திற்கு வருகை தந்த வெல்லாவெளி பொலிஸார் சடலத்தை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விசாரணையின் போது உயிரிழந்தவர் வெல்லாவெளி, விவேகானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 64 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான்குட்டி புலேந்திரன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சடலமாக மீட்கப்பட்ட நபர் யானை தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலமாக மீட்கப்பட்ட நபர், கடந்த வெள்ளிக்கிழமை(14-06-2024) மாலை வீட்டிலிருந்து புறப்பட்டு ஆயிரம் கால் மண்டப வைரவர் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம்(16-06-2024) இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.