நிரந்தர நியமனம் பெற போகும் சில அரச ஊழியர்கள்உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் அனைத்து தரப்பு ஊழியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உறுதிப்படுத்தல்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

நிரந்த நியமனம்
குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை,நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 2500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 03ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை