பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரைச் சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்!கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும்,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனுக்கும் இடையிலான சந்தித்திப்பு நேற்று  பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.


இதன்போது கதிர்காம பாதையாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்காக உகன தேசிய பூங்கா வாயிற்கதவுகளை திறக்கும் திகதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஜூன் மாதம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு வாயிற்கதவுகளை திறப்பதற்கு தயாராகுமாறு அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்ட செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை