சகல மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் இன்று பணிப்புரை..!ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு சகல மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் பணிப்புரை இன்று (27-06-2024) விடுக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் பங்குபற்றக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பில் உரிய ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான படிவங்களும் அனுப்பபட்டுள்ளது.
புதியது பழையவை