இலங்கைக்கு வந்திருந்த வேளையில் கடந்த புதன்கிழமை (26-06-2024) முதல் காணாமல் போயுள்ள 25 வயதுடைய இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியான தாமர் அமிதாயை கண்டுபிடிக்க திருகோணமலை - உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி இலங்கைக்கு வந்த அமிதாயி, திருகோணமலை பகுதியில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார்.
விருந்தக உரிமையாளர்
அவர் இணையத்தில் விருந்தினர் மாளிகையை முன்பதிவு செய்து திருகோணமலையில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தார்.
எனினும் வெளியில் சென்றவர், புதன்கிழமை (26) முதல் விடுதிக்கு திரும்பவில்லை என்றும் விருந்தக உரிமையாளர் கூறியுள்ளார்
இது குறித்து விருந்தக உரிமையாளர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அமிதாய் தனது உடமைகளை விருந்ததகத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்தநிலையில் அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் +972508899698 (WhatsApp) அல்லது sar@magnus.co.ilஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.