லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைக்கப்பட்டது!



லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று (04-06-2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,680 ரூபாவாகும்.

5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,477 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
புதியது பழையவை