தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியொன்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா கவுண்டியில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று காலை 8:46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
34.14 பாகை வடக்கு அட்சரேகை மற்றும் 86.36 பாகை கிழக்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் கண்காணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.