மட்டக்களப்பு குருக்கள்மட பிரதான வீதியில் உள்ள மின்சாரத்தூணில் மோதி சற்று முன் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இன்று(01-06-2024) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கி களுதாவளை கிராமத்தை சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.இவ் விபத்து பற்றி மேலும் தெரிய வருகையில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதேசத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் உயர்ரக மோட்டார்சைக்கிளை வேகமாக செலுத்திச் சென்ற சமயம் குருக்கள்மடம் பகுதியால் பயணிக்கும் போது முருகன் ஆலயத்தை அண்மித்த பிரதான வீதி வளைவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின்சாரத்தூணில் மோதிய போதே இவ் அனர்த்தம் ஏற்பட்டது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துச் செல்கின்றனர். 

காயமடைந்த இளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த இளைஞரின் சடலமும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை